உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 20, 2026 03:31 AM

அ நிறம் | அளவு
மும்பை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், 2026 காரீப் பருவப் பயிரான பருத்தி வரத்து அதிகரிக்க தொடங்கியு ள்ளது.
அதேவேளையில், உலகளாவிய சந்தையில் பருத்தி விலை குறைந்து வருவதால், உள்நாட்டு சந்தையிலும் விலை சரிந்து, கொள்முதல் செய்வதில் வர்த்தகர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் வட மாநிலங்களில் தினசரி கிட்டத்தட்ட 30,000 பேல்கள் வரத்து இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில வாரங்களுக்கு முன் ஒரு கேண்டிக்கு 70,000 ரூபாயை தாண்டிய பழைய பருத்தியின் விலை தற்போது 66,500 -- 67,500 ரூபாய்க்கு குறைந்துள்ளது.
