நாட்டின் மின் நுகர்வு ஜனவரியில் 3 சதவிகிதம் உயர்வு
நாட்டின் மின் நுகர்வு ஜனவரியில் 3 சதவிகிதம் உயர்வு
ADDED : பிப் 03, 2025 01:26 AM

புதுடில்லி:நாட்டின் மின் நுகர்வு ஜனவரியில் 3 சதவீதம் அதிகரித்து, 13.75 கோடி யூனிட்டுகளாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜனவரியில் நாட்டின் மின் நுகர்வு வெறும் 2.70 சதவீதம் அதிகரித்து 13.75 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இது முந்தைய 2024 ஜனவரியில் 13.39 கோடி யூனிட்டாக இருந்தது. மேலும், ஒரு நாளில் அதிகபட்ச மின் வினியோகம் கடந்தாண்டு ஜனவரியில் 222.32 ஜிகாவாட்டில் இருந்து 237.30 ஜிகாவாட்டாக அதிகரித்திருந்தது.
கடந்த மாதம், பகல் மற்றும் இரவுநேர வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருந்ததால், ஹீட்டர் மற்றும் கெய்சர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு குறைந்ததால், மின்தேவை மற்றும் நுகர்வு குறைந்தே இருந்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அரசு மதிப்பீட்டின்படி, நடப்பாண்டு கோடைக்காலத்தில் உச்ச மின்தேவை 270 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.