இயற்கை வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி பிரிவு உருவாக்கம்
இயற்கை வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி பிரிவு உருவாக்கம்
ADDED : பிப் 22, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவின் இயற்கை வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்தும் முயற்சியில், ஏ.பி.இ.டி.ஏ., எனும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இயற்கை வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில், அதற்கென பிரத்யேகமாக ஒரு பிரிவை தற்போது உருவாக்கி உள்ளது.
நாட்டின் இயற்கை வேளாண் ஏற்றுமதி திறனை பெருக்குவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு மைய புள்ளியாக இந்த பிரிவு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிசமான இயற்கை வேளாண் திறன் கொண்ட மாநிலங்களில் அதிக அளவிலான இயற்கை வேளாண் ஏற்றுமதி மையங்களை உருவாக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.