ADDED : அக் 26, 2025 01:24 AM

புதுடில்லி: சுங்க வரி தொடர்பான தனித்தனி அறிவிக்கைகளை ஒருங்கிணைத்து ஒரே ஆவணமாக, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியமான சி.பி.ஐ.சி., வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து அத்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவல்:
மறைமுக வரி மற்றும் சுங்க வரி தொடர்பான விதிகளை எளிமைப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதில் சி.பி.ஐ.சி., கவனம் செலுத்தி வருகிறது.
இதன் வாயிலாக, எளிதாக தொழில் நடத்துவதை உறுதிப்படுத்த, 31 தனித்தனி அறிவிக்கைகளை ஒருங்கிணைத்து ஒரே ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அறிவிக்கை, நவ., 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. தற்போது அமலில் இருக்கும் அனைத்து வரி விலக்குகள், சலுகைகள் இதில் தொடரும். அதேநேரம், எளிமையான, ஒருங்கமைந்த வடிவில் இது இருக்கும்.
இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சுங்க வரி அலுவலர்கள் என முத்தரப்பினருக்கும், விதிகளை பின்பற்றுவதில் உள்ள சிரமத்தை இது குறைக்கும்.

