ADDED : டிச 12, 2024 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், 'சிப்காட்' நிறுவனத்தின் தொழில் பூங்காவில், 400 கோடி ரூபாய் முதலீட்டில், 'டாபர் இந்தியா' நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுடன் இந்தாண்டு ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, ஆலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் துறையிடம், டாபர் இந்தியா நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
இந்த ஆலையால், 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.