
கிரெடிட் கார்டு இல்லாமல் விமான நிலையங்களில் இருக்கும் ஓய்வறைகளை பயன்படுத்த முடியுமா?
முடியும். இப்போது பல டெபிட் கார்டுகள் வாயிலாகவும் இந்த ஓய்வறை வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பயன்படுத்தி கொள்ள ஏதுவான, டெபிட் கார்டுகளில் ஒரு சில மட்டும் இங்கே:
ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் கோரல் பிளஸ்
இந்த கார்டு இருப்பின், ஒவ்வொரு காலாண்டிற்கும் இரண்டு முறை ஓய்வறைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கார்டு வாயிலாக நீங்கள் முந்தைய காலாண்டில் 10,000 செலவு செய்திருந்தால் மட்டுமே. இந்த வசதி கிடைக்கும். இதற்கு மாதம் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு, இது, ஒரு நல்ல துவக்க நிலை தேர்வாகும்.
ஆக்சிஸ் பேங்க் பர்கண்டி
உள்நாட்டு மற்றும் சர்வதேச ஓய்வறைகளில், ஒவ்வொரு காலாண்டிற்கும் மூன்று இலவச வாய்ப்பை வழங்குகின்றன. இந்த வசதியைப் பெற, ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் செலவு செய்ய வேண்டும். பர்கண்டி வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
எச்.டி.எப்.சி., பிளாட்டினம்
எச்.டி.எப்.சி., பிளாட்டினம் கார்டு ஒவ்வொரு காலாண்டிற்கும் இரண்டு முறை ஓய்வறை வசதிகளை பெறலாம். இதற்கான ஆண்டு கட்டணம் 850 ரூபாய்.
எச்.டி.எப்.சி., ரூபே பிளாட்டினம்
ஒவ்வொரு காலாண்டிற்கும் இரண்டு சர்வதேச மற்றும் ஒரு உள்நாட்டு விமான நிலைய அல்லது ரயில்வே ஓய்வறை பயனை அனுபவிக்கலாம். இதன் ஆண்டு கட்டணம் வெறும் 200 ரூபாய் மட்டுமே
எச்.டி.எப்.சி. இன்பினிட்டி
இது ஒரு இன்வைட் ஒன்லி கார்டு. ஆண்டுக்கு 16 இலவச உள்நாட்டு ஓய்வறை வசதிகளை வழங்குகிறது. அதாவது, ஒரு காலாண்டிற்கு நான்கு. இதை வழங்குவதற்கான கட்டணம் 2,500 ரூபாய். இருப்பினும், இன்பினிட்டி வங்கி வாடிக்கையாளர்களுக்கு, முதல் ஆண்டில் இந்தக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.