ADDED : மே 27, 2025 09:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோயாபீன் சாகுபடியில் போதிய லாபம் கிடைக்காததால், சோளம், கரும்பு ஆகியவற்றை பயிரிடுவதால், சோயாபீன் சாகுபடி பரப்பளவு குறையும் என, விவசாயிகள் மற்றும் தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவில் கோடை காலத்தில் விதைக்கப்படும் எண்ணெய் வித்து பயிர் சோயாபீன் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளாக சோயாபீன் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை.
இதையடுத்து, சோளம் மற்றும் கரும்பு சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைப்பதால், நடப்பாண்டில் விவசாயிகள் எண்ணெய் வித்துக்களை பயிரிடுவதை தவிர்த்து வருகின்றனர்.