UPDATED : ஜன 13, 2024 11:46 AM
ADDED : ஜன 09, 2024 01:06 AM
சென்னை : உலக முதலீட்டாளர் மாநாடு பிரதிநிதிகள் குழு, ஒரகடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள, தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டனர்.
தமிழக அரசு, 'டாடா டெக்னாலஜிஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 2,877 கோடி ரூபாய் செலவில், தொழில் 4.0 தரத்தில், 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதிநிதிகளில், 25 பேர் அடங்கிய குழு, நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையம் சென்றனர்.அங்கு, 4.0 தரத்தில் அமைக்கப்பட்டு உள்ள, தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டனர். அங்குள்ள இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள், மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து, தொழிலாளர் நலத்துறை செயலர் குமார்ஜெயந்த், குழுவினருக்கு எடுத்துரைத்தார்.