தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சர்க்கரை விலையை உயர்த்த கோரிக்கை

 சர்க்கரை விலையை உயர்த்த கோரிக்கை

 சர்க்கரை விலையை உயர்த்த கோரிக்கை


ADDED : ஜூலை 05, 2026 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 02:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை 31 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தவும், ஏற்றுமதி விதிமுறைகளை தளர்த்தவும் மஹாராஷ்டிரா அரசு, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது:

மஹாராஷ்டிரா, நடப்பாண்டில், 99 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளது. சர்க்கரை விற்பனை விலை மற்றும் ஏற்றுமதி, எத்தனால் கொள்முதல் ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்றவாறு விலை உயராமல் உள்ளது. கடந்த 2019 முதல் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை 31 ரூபாயாகவே உள்ளது. அதேநேரம் கரும்புக்கான விலை 2,750 ரூபாயிலிருந்து 3,550 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதனால், சர்க்கரை விலையை உயர்த்துவதுடன் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை தளர்த்தவும், எத்தனால் கொள்முதலை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us