தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ' வரியை திரும்ப பெறும் திட்டத்தை 3 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்'

 ' வரியை திரும்ப பெறும் திட்டத்தை 3 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்'

 ' வரியை திரும்ப பெறும் திட்டத்தை 3 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்'

1


ADDED : ஜூலை 05, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 02:11 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: ஏற்றுமதி ஜவுளி பொருட்களுக்கான வரிகளை திருப்பி வழங்கும் (ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்.) திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு இந்திய ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்றுமதிக்கான ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்யும்போது, பல்வேறு நிலைகளில் செலுத்தப்படும் மத்திய, மாநில வரிகள் மற்றும் தீர்வைகளை திருப்பி பெறும் வகையில், 2019ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், பருத்தி டி--ஷர்ட்கள் உள்ளிட்ட சில ஜவுளி பொருட்களுக்கு 4.90 சதவீதம் வரை வரிச்சலுகை கிடைக்கிறது.

திட்டத்தின் தற்போதைய காலக்கெடு வரும் செப். 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) உறுப்பினர் சுப்பிரமணியன் கூறுகையில், “இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரிச்சலுகை பணமாக வழங்கப்படாது. அதற்கு பதிலாக பத்திரமாக வழங்கப்படும். அதை அடுத்த முறை வரி செலுத்த பயன்படுத்தவோ அல்லது வரி செலுத்துபவர்களுக்கு மாற்றி அதன் பயனை பெறவோ முடியும். திட்டத்தை நீட்டிக்குமாறு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us