'புதிய ஏற்றுமதிகளுக்கு வழிகாட்ட மேம்பாட்டு வாரியம் தேவை'
'புதிய ஏற்றுமதிகளுக்கு வழிகாட்ட மேம்பாட்டு வாரியம் தேவை'
ADDED : டிச 12, 2025 01:35 AM

மதுரை: ''புதிய ஏற்றுமதிகளுக்கு வழிகாட்டும் வகையில் தமிழகத்தில் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும்'' என ஏற்றுமதி மேம்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் அந்த மையத்தின் தலைவர் ராஜமூர்த்தி கூறியதாவது:
ஏற்றுமதியை பொறுத்தவரை தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள குஜராத்தில் வர்த்தக ஏற்றுமதி தான் அதிகம். இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் தமிழகத்தை போல குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இல்லை.
வேளாண், உணவுப்பொருட்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டிய பொருட்களை பாதுகாக்கக்கூடிய கிடங்கு வசதி, பேக்கிங் வசதி தமிழகத்தில் இல்லை.
உலகளவில் இந்த பொருட்களை வாங்குவதற்கான சந்தை உள்ளது. ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக, பொருட்களின் தரம் குறித்த முன்ஆய்வு சான்று வாங்க வேண்டும். அதற்கு போதிய ஆய்வக வசதி தமிழகத்தில் இல்லை.
தென்மாவட்டங்களில் உற்பத்தியாகும் மாம்பழங்களுக்கு நிறைய ஏற்றுமதி வாய்ப்பு இருந்தாலும் 'இர்ரேடியேஷன்' சான்றிதழ் வாங்கினால் மட்டுமே ஏற் றுமதி செய்ய முடியும்.
இந்த சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஆந்திராவில் உள்ளது. மாம்பழ ஏற்றுமதியாளர்கள் தங்களது மாம்பழங்களை கன்டெய்னரில் ஏற்றி ஆந்திராவுக்கு கொண்டு சென்று சான்றிதழ் வாங்கி அதன் பின் துறைமுகத்திற்கு அனுப்புவது சாத்தியமில்லாதது.
உற்பத்தி தொழில்களோடு சேவை தொழில்களுக்கும் நிறைய ஏற்றுமதி வாய்ப்புள்ளது. ஏற்றுமதிக்கான ஆவணம், நடைமுறை போன்ற தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும். ஏற்றுமதியாளர்கள் இந்த அமைப்பை எளிமையாக அணுகி தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேளாண், உணவுப்பொருட்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டிய பொருட்களை பாதுகாக்கக்கூடிய கிடங்கு வசதி, பேக்கிங் வசதி தமிழகத்தில் இல்லை
ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக, பொருட்களின் தரம் குறித்த முன்ஆய்வு சான்று வாங்க வேண்டும். அதற்கு போதிய ஆய்வக வசதி தமிழகத்தில் இல்லை.

