ADDED : பிப் 05, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தர்மபுரி மாவட்டம் அதகபாடியில், 1,725 ஏக்கரில், சிப்காட் நிறுவனம் தொழில் பூங்கா அமைக்க உள்ளது. அங்கு முதல் கட்டமாக 100 கோடி ரூபாயில், 200 ஏக்கரில் பூங்கா அமைப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது.
அதகபாடி தொழில் பூங்காவுக்கு, 2024 நவம்பரில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து 1,725 ஏக்கரில், முதல் கட்டமாக 200 ஏக்கரில் தொழில் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
அங்கு, உள்புற சாலைகள், தண்ணீர் வினியோகம், மழைநீர் வடிகால், நடைபாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய தற்போது, சிப்காட், 'டெண்டர்' கோரியுள்ளது.