டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் மதிப்பு மும்மடங்கு அதிகரிக்கும்
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் மதிப்பு மும்மடங்கு அதிகரிக்கும்
ADDED : பிப் 22, 2024 01:41 AM

புதுடில்லி: கடந்த 2022ல், இந்தியாவின் பொது டிஜிட்டல் உள்கட்டமைப்புகளின் மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.9 சதவீதமாக இருந்ததாகவும், இது 2030க்குள் மும்மடங்கு உயரும் என்றும், 'நாஸ்காம்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது: டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் உருவாக்கத்தில், இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது.
டிஜிட்டல் பயன்பாட்டை ஆதரிப்பதன் வாயிலாக சமூக மாற்றத்தையும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் உறுதி செய்கிறது.
உலகம் முழுதும் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்கும், உலக நாடுகளுக்குள் ஒருங்கிணைத்தல், வெளிப்படைத்தன்மைக்கும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் எண்ணற்ற ஆற்றல் கொண்டது.
ஆதார், யு.பி.ஐ., மற்றும் பாஸ்டேக் போன்ற இந்திய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளின் மதிப்பு, கடந்த 2022ம் ஆண்டில், கிட்டத்தட்ட 2.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.9 சதவீதம். இது வரும் 2030ம் ஆண்டுக்குள், 2.94 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளது.