தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'டிஸ்ட்ரிக்ட் 12' அலுவலக திட்டம் சென்னை பெரம்பூரில் அறிமுகம்

 'டிஸ்ட்ரிக்ட் 12' அலுவலக திட்டம் சென்னை பெரம்பூரில் அறிமுகம்

 'டிஸ்ட்ரிக்ட் 12' அலுவலக திட்டம் சென்னை பெரம்பூரில் அறிமுகம்


ADDED : ஜூலை 30, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 06:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை பெரம்பூரில் 63 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள எஸ்.பி.ஆர்., சிட்டியில், 'டிஸ்ட்ரிக்ட் 12' என்ற புதிய அலுவலக திட்டத்தை எஸ்.பி.ஆர்., இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசின் 'பெரம்பூர் 2.0' வளர்ச்சி முயற்சிக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில் முனைவோர், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்கள் சொந்த அலுவலக இடங்களை வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இத்திட்டத்தில், 120 சதுர அடி முதல் 3,000 சதுர அடி வரையிலான அலுவலகங்கள், பகிர்வு பணியிடங்கள், கூட்ட அரங்குகள், 24 மணி நேர பாதுகாப்பு, உணவகம் மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.

மேலும், எஸ்.பி.ஆர்., சிட்டியில் வணிக வளாகம், எட்டு திரைகள் கொண்ட திரையரங்கம், தங்கும் விடுதி, மருத்துவம், கல்வி மற்றும் குடியிருப்பு வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், நிறுவன நிர்வாகிகள் ஹிதேஷ் கவாட், நவீன் ரங்கா மற்றும் ஷாஷிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை பெரம்பூரில், 'டிஸ்ட்ரிக்ட் 12' திட்ட அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டோர்.

இத்திட்டம், வளர்ந்து வரும் நிறுவனங்கள் சொந்த அலுவலக இடங்களை வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us