உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதன் முறையாக அதிக முதலீடு
உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதன் முறையாக அதிக முதலீடு
ADDED : மே 11, 2025 12:17 AM

புதுடில்லி:தேசிய பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள நிப்டி 500 குறியீட்டில், முதன் முறையாக, உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து, அன்னிய நிறுவன முதலீட்டாளர்களை பின்னுக்கு தள்ளியுள்ளனர்.
இதுகுறித்து மோதிலால் ஆஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தொடர்ச்சியாக அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்று வந்த நிலையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் கைகொடுத்ததால், சந்தையில் புதிய மைல்கல் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இது இந்திய மூலதன சந்தையின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்துள்ளது.
கடந்த மார்ச் நிலவரப்படி, நிப்டி 500 நிறுவனங்களில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு, வரலாறு காணாத வகையில் 19.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு 18.8 சதவீதமாக குறைந்து உள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், அன்னிய முதலீட்டாளர்கள், உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு பங்களிப்பு 2:1 என்ற விகிதத்தில் இருந்து, தற்போது 1:1 மடங்காக குறைந்து உள்ளது.
உள்நாட்டு மூலதன ஆதிக்கம் அதிகரித்து வருவதை வெளிப்படுத்தி உள்ளது.
முதலீடு 2024 மார்ச் 2025 மார்ச் (சதவீதத்தில்)
உள்நாட்டு நிறுவனங்கள் 17.6 19.2
அன்னிய நிறுவனங்கள் 19.2 18.8
நிப்டி 500 நிறுவனங்களில், மொத்தமுள்ள 24 துறைகளில், 18 துறைகளில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு அதிகரிப்பு
வங்கிகள், நுகர்வோர் பொருட்கள், காப்பீடு, தொழில்நுட்பம், சிமென்ட், எண்ணெய், எரிவாயு, வாகனங்கள் துறையில் முதலீடு அதிகரிப்பு
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள் தவிர, பிற அனைத்து துறைகளிலும் முதலீட்டை தற்போது குறைத்துள்ளனர்.
செபி தரவுகளின்படி, நிப்டி 500 நிறுவனங்களில், பெரிய நிறுவனங்கள் 68%, மத்திய நிறுவனங்கள் 21%, சிறு நிறுவனங்கள் 11% இடம்பெற்றுள்ளன.
நிப்டி 500 நிறுவனங்களில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு, வரலாறு காணாத வகையில் 19.20 சதவீதமாக அதிகரித்துள்ளது.