ADDED : ஜன 30, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனமான, 'ட்ரீம் ஏரோஸ்பேஸ்' விண்வெளி துறையில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 3 கோடி ரூபாயை, 'இன்ப்லெக் ஷன் பாய்ன்ட் வெஞ்சர்ஸ்' நிறுவனத்திடம் இருந்து திரட்டிஉள்ளது.
இந்த நிதியை, குறைந்த எரிபொருள் மற்றும் குறைவான செலவில் ராக்கெட்டை ஏவும் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக்கு பயன்படுத்த ட்ரீம் ஏரோஸ்பேஸ் திட்டமிட்டுள்ளது. இது, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனத்திடம் இருந்து, 'டான்சீட்' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுள்ளது.