துளிகள்: ரூ.17,700 கோடி பங்குகள் அன்னிய முதலீட்டாளர் விற்பனை
துளிகள்: ரூ.17,700 கோடி பங்குகள் அன்னிய முதலீட்டாளர் விற்பனை
ADDED : ஆக 03, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.17,700 கோடி பங்குகள் அன்னிய முதலீட்டாளர் விற்பனை
மும்பை:அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த மாதம் 17,741 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 25% வரி விதிக்க உள்ளதாக கடந்த மாத இறுதியில் அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, ஜூலை 28 - ஆகஸ்ட் 1ம் தேதிக்கு இடையே மட்டும் 17,391 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றுள்ளனர்.
இதன் காரணமாக, மாதத்தின் ஒட்டுமொத்த முதலீட்டு மதிப்பு சரிவு கண்டுள்ளது.
இதற்கு முந்தைய மூன்று மாதங்களில், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் கணிசமாக முதலீட்டை மேற்கொண்டிருந்தனர்.