ADDED : ஜூலை 06, 2025 11:24 PM

எம்.எம்.ஏ., விருது வென்ற எம்.ஆர்.எப்.,
உற்பத்தி பிரிவில் சிறந்த மேலாண்மை நிறுவனத்துக்கான மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் விருதை எம்.ஆர்.எப்., நிறுவனம் வென்றுள்ளது. சேவைப்பிரிவில், சோழமண்டலம் இன்வெஸ்மென்ட் அண்டு பைனான்ஸ், கல்வி நிறுவனங்கள் பிரிவில், வி.ஐ.டி.,பல்கலை உள்ளிட்டவை விருது வென்றன. சென்னையில் நடைபெற்ற 23வது எம்.எம்.ஏ., விருது விழாவில், வால்வோ குழுமத்தின் இந்திய தலைவர் கமல் பாலி வழங்கினார்.
அதானியுடன் மல்லுக்கட்டும் டால்மியா
கடனில் மூழ்கி உள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் சொத்துக்களை ஏலம் எடுப்பதில், அதானி குழுமம், டால்மியா பாரத் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கிட்டத்தட்ட 1,000 ஹெக்டேர் நிலத்தை, 14,000 கோடி ரூபாய்க்கு வாங்க, இரு நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன.
இதற்கு அடுத்ததாக, வேதாந்தா குழுமம் 12,000 --13,000 கோடி ரூபாய்; ஜிண்டால் குழுமம் 10,000 கோடி ரூபாயை ஏல விண்ணப் பத்தில் குறிப்பிட்டுள்ளன.