ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பொது / துளிகள் / துளிகள்
/
செய்திகள்
பொது
துளிகள்
ADDED : ஏப் 07, 2025 01:28 AM
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கென பிரத்யேகமாக 'ஸ்டார்ட்அப் இந்தியா டெஸ்க்' என்ற உதவி மைய எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்தார். மேலும், இந்த நான்கு இலக்க கட்டணமில்லா எண், நாட்டின் பல்வேறு பிராந்திய மொழிகளில் அணுகக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.ஆலோசனைகள், கருத்துகள் மற்றும் புகார்களை இந்த உதவி மைய எண்ணில் தெரிவிக்கலாம். விரைவில் உதவி மைய எண் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த மார்ச் 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 56.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத உயர்வாகும். மேலும், மதிப்பீட்டு காலத்தில் தங்கத்தின் இருப்பு, 6.61 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, தோராயமாக 10 முதல் 11 மாத இறக்குமதிகளை ஈடுகட்ட போதுமானதாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 68 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற காரணங்களினால் கடந்த பிப்ரவரியில், தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ஏற்றுமதிகள் எதிர்மறையாக இருந்தன. இந்தியாவின் சரக்குகள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டின் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் 33.63 லட்சம் கோடி ரூபாயாகவும், சேவைகள் ஏற்றுமதி 30.17 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இது முந்தைய ஆண்டில் முறையே 33.61 லட்சம் கோடியாகவும், 26.44 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
கடந்த பிப்ரவரியில், இந்தியாவின் கிரெடிட் கார்டுகள் வாயிலான செலவுகள், முந்தைய மாதத்தை விட 9 சதவீதம் குறைந்து 1.67 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஏழு மாதங்களில் இல்லாத குறைந்த அளவாகும். இருப்பினும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 12 சதவீதம் அதிகரித்து இருந்தது. மேலும், தரவுகளின்படி, கிரெடிட் கார்டுகளின் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையானது 39.6 கோடியாக இருந்தது. இது கடந்த 13 மாதங்களில் இல்லாத வகையில், மிகக்குறைந்த அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேவேளையில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், 8 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளது.