
வாகனங்கள் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சி
கடந்த செப்டம்பரில் நாட்டின் பயணியர் வாகன ஏற்றுமதி 30 சதவீதமும், டூவீலர் ஏற்றுமதி 15 சதவீதமும் அதிகரித்துள்ளதாக, வாகன நிறுவனங்களின் சங்கமான சியாம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் மட்டுமின்றி, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், மொத்த பயணியர் வாகனங்கள் ஏற்றுமதி 18.40 சதவீதமும், டூவீலர் ஏற்றுமதி 24.20 சதவீதமும் அதிகரித்து உள்ளன. இந்தியாவில் தயாராகும் வாகனங்களுக்கான தேவை, உலக சந்தையில் வலுவாக இருப்பதை இது காட்டுகிறது.
கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்
சூளகிரி ஆலையில் உற்பத்தி @@
கோவையைச் சேர்ந்த வாகன மற்றும் தொழில்துறை உபகரணங்கள் தயாரிப்பாளரான கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன், சூளகிரி சிப்காட் வளாகத்தில் உள்ள புதிய ஆலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியை துவங்கியது. ஒசூர் அடுத்த சூளகிரியில், கடந்த ஜனவரியில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், கார், பைக் உதிரிபாகங்களுக்கான அலுமினிய பொருட்கள் தயாரிப்பு ஆலை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இதில் தற்போது வணிக ரீதியான உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.