தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/துளிகள்

துளிகள்

துளிகள்


UPDATED : அக் 17, 2026 07:27 PM

ADDED : அக் 17, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 07:27 PM ADDED : அக் 17, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதிவேக இணைய சேவை: ஸ்டார்லிங்க் தயார்

இந்தியாவில் அதிவேக இணைய சேவையை வழங்க தயாராக இருப்பதாக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசின் ஒழுங்குமுறை அமைப்புகளின் பல்வேறு ஒப்புதல்களுடன் இணைய சேவைக்கான பிரத்யேக உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவன மறுசீரமைப்பில் லென்ஸ்கார்ட்

உதிரிபாகங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான வினியோகத்தை முறைப்படுத்த கண்ணாடி விற்பனை நிறுவனமான லென்ஸ்கார்ட், தனது இரண்டு துணை நிறுவனங்களை தாய் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளது. மேலும், மெட்டல் பிரேம்களை தயாரிப்பதற்காக சீனாவின் மிங்பெங் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சூர்யா புட்ஸ், டோட்லா, யூ.இ.ஐ.ஆர்., நிறுவனங்கள் மீது வழக்கு

பிஸ்கெட் தயாரிப்பில் கால்நடைத் தீவன தவிடு பயன்படுத்தியதற்காக ‘பிரியாகோல்டு பிராண்டின் சூர்யா புட்ஸ் நிறுவனம் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பாலில் டிடர்ஜென்ட், காஸ்டிக் சோடா கலந்திருந்ததுடன், கொழுப்புச் சத்து குறைவாக இருந்ததற்காக ‘டோட்லா டெய்ரி நிறுவனம்’மீதும், உலர் திராட்சையில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டறியப்பட்டதால் ‘யு.இ.ஐ.ஆர். ஆர்கானிக் புட்ஸ்’ நிறுவனம் மீதும் வழக்குத் தொடர ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us