UPDATED : டிச 15, 2025 03:32 AM
ADDED : டிச 15, 2025 02:12 AM

கட்டமைப்பு பற்றாக்குறை சோலார் மின் திறன் பாதிப்பு
ரூ.3,060 கோடி நிதி திரட்டிய உடான்
பெங்களூருவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனமான உடான், ரூ.3060 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது. எம்&ஜி பி.எல்.சி., லைட் ஸ்பீடு வெஞ்ச்சர் பார்ட்னர்ஸ், டி.எஸ்.டி குளோபல் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து இந்நிதி கிடைத்துள்ளது. தங்களது வர்த்தகத் திட்டத்துக்கு இது முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று உடான் இணை நிறுவனர் வைபவ் குப்தா கூறியுள்ளார். அடுத்த 12-18 மாதங்களில் இந்நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைய இருக்கிறது.
எம்.எஸ்.எம்.இ., கடன் வட்டிக்கு புதிய நடைமுறை
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும்போது, வங்கிகள் வெளிப்புற அளவுகோல் முறையைப் பின்பற்றுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக வங்கிகள் கடன் வழங்கும் போது, எம்.சி.எல்.ஆர், உள்ளிட்ட சொந்த அளவுகோல்களைப் பின்பற்றி வட்டியை நிர்ணயம் செய்யும். இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இதன்படி, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும் காலம், 3 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பழைய வாடிக்கையாளர்களும்இதன் கீழ் புதிய வட்டி வீதங்களுக்கு மாறலாம்.

