வரியில்லா சர்க்கரை இறக்குமதி அனுமதி டிச., 31 வரை நீட்டிப்பு
வரியில்லா சர்க்கரை இறக்குமதி அனுமதி டிச., 31 வரை நீட்டிப்பு
UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 10:24 PM

புதுடில்லி: வரியில்லா சர்க்கரை இறக்குமதிக்கு அக்., 31ம் தேதி வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதை டிச., 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய வர்த்தக அமைச்ச கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வெளிநாடுகளிலிருந்து 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரி விகித ஒதுக்கீட்டின் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கான அனு மதி கடந்த ஆக., 20ம் தேதி அறிவிக்கப்பட்டது . இதன்படி, இறக்குமதி எண் 170114 கொண்ட சர்க்கரையை வரியில்லாமல் அக்., 31ம் தேதி வரை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பண்டிகை காலம், உள்நாட்டு தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு டிச., 31ம் தேதி வரை இறக் குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி சர்க்கரை அளவு 10 லட்சம் டன் என்பதில் மாற்றமில்லை. அதேபோல் கடந்த ஆக., மா தத்தில் அனு மதிக் கப்பட்ட விதிமுறைகளிலும் எந்த வித மாற் ற மும் இல்லை .
இவ் வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
