தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/துாத்துக்குடி துறைமுக சரக்கு தளத்துக்கு கிடைத்தது ‘பசுமை முனையம்’ அங்கீகாரம்

துாத்துக்குடி துறைமுக சரக்கு தளத்துக்கு கிடைத்தது ‘பசுமை முனையம்’ அங்கீகாரம்

துாத்துக்குடி துறைமுக சரக்கு தளத்துக்கு கிடைத்தது ‘பசுமை முனையம்’ அங்கீகாரம்


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சர்வதேச கன்டெய்னர் முனையத்தில், அனைத்து கருவிகளும் மின்மயமாக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கு ‘பசுமை முனையம்’ என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் விஜய் குமார், இந்த வாரம் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது, துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் உள்ள சர்வதேச கன்டெய்னர் முனையத்தை பசுமை முனையமாக அவர் அறிவித்தார்.

இது குறித்து வ.உ.சி., துறைமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சர்வதேச கன்டெய்னர் முனையத்தின் கருவிகள் அனைத்தும் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளதால், அது பசுமை முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் எரிசக்தியை சேமிக்கும் வகையிலான கன்டெய்னர் கையாளும் பணிகளை ஊக்கு விக்கும் வகையில், 13 மின்சார உள் போக்குவரத்து வாகனங்களின் பயன்பாட்டை மத்திய கப்பல் போக்குவ ரத்து துறை செயலர் விஜய் குமார் தொடங்கி வைத்தார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுக தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் கூறுகையில், “துறைமுகத்தின் பசுமை கடல்சார் கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

“ இதில், மெத்தனால் எரிபொருள் நிரப்பும் சோதனை வசதி, பசுமை ஹைட்ரஜன் சோதனை திட்டம் மற்றும் காற்றாலை மின் வசதிகள் உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

“ இவற் றுக்கான முதலீட்டு மதிப்பு 18,400 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்,’’ என்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us