ADDED : அக் 22, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி :இந்த ஆண்டின் தீபாவளி ஷாப்பிங்கில், இணையதள வணிகமான இ-காமர்ஸ், கடந்த ஆண்டை விட 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக யுனிகாமர்ஸ் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆர்டர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த வளர்ச்சி ஏற்பட்ட நிலையில், மதிப்பு அடிப்படையில் கடந்த ஆண்டைவிட 23 சதவீதம் அதிகரித்தது.
இதில், குவிக் காமர்ஸ் எனப்படும் குறுகிய நேர டெலிவரி செயலிகளில் வர்த்தகம் இந்த தீபாவளிக்கு 120 சதவீத உயர்வு கண்டது. ஆடைகள் உள்ளிட்ட பிராண்ட் நிறுவனங்களின் செயலிகள், இணைய தளங்களில் ஆர்டர்கள் 33 சதவீதம் அ திகரித்தன.
குவிக் காமர்ஸ் விற்பனையில், இனிப்பு, உலர் பழங்கள், கார வகைகள் உட்பட வேகமாக விற்று தீரும் பொருட்கள் அதிக பங்கு வகித்தன.