சந்தை மதிப்பீட்டில் சரிவு கண்ட எட்டு முன்னணி நிறுவனங்கள்
சந்தை மதிப்பீட்டில் சரிவு கண்ட எட்டு முன்னணி நிறுவனங்கள்
ADDED : மே 11, 2025 11:28 PM

மும்பை:கடந்த வாரம், 10 முன்னணி நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு, 1.60 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது. பங்கு சந்தையில் ஏற்பட்ட மந்தமான போக்கின் காரணமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
பங்கு சந்தையில் முன்னணியில் உள்ள 10 நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி., வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஐ.டி.சி., ஆகிய 8 நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பீட்டில் சரிவை சந்தித்தன. மறுபுறம் இன்போசிஸ் மற்றும் இந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவை லாபம் ஈட்டின.
சரிவை சந்தித்தாலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிக மதிப்புள்ள நிறுவனமாக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து எச்.டி.எப்.சி., வங்கி, டி.சி.எஸ்., ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எஸ்.பி.ஐ., இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஐ.டி.சி., ஆகியவை உள்ளன.