மின்சார 3 சக்கர வாகனங்கள் டி.வி.எஸ்., - ஹூண்டாய் பேச்சு
மின்சார 3 சக்கர வாகனங்கள் டி.வி.எஸ்., - ஹூண்டாய் பேச்சு
ADDED : ஜன 04, 2025 11:59 PM

டி.வி.எஸ்., நிறுவனத்துடன் இணைந்து, புதிய மின்சார மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட, ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
மின்சார கார்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஹூண்டாய் இந்தியா, தற்போது கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும் நடவடிக்கையாக, மின்சார மூன்று சக்கர வாகன தயாரிப்பில் இறங்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ்.,மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகின்றது.
இதன்படி, புதிய வாகன தயாரிப்பில், ஹூண்டாய் நிறுவனம் வடிவமைப்பு, பொறியியல் பணிகளை கவனிக்கும். ஒப்பந்த அடிப்படையில், மின்சார மூன்று சக்கர வாகனத்தை தயாரித்து வழங்கும் பணியை டி.வி.எஸ்., மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
இந்தாண்டு தன் சொந்த மின்சார மூன்று சக்கர வாகனத் தயாரிப்பை அறிமுகப்படுத்தும் முனைப்பில் டி.வி.எஸ்., நிறுவனம் பணியாற்றி வருகிறது.

