மொரீஷியசுக்கு மின்சார பஸ்கள் சென்னையிலிருந்து ஏற்றுமதி
மொரீஷியசுக்கு மின்சார பஸ்கள் சென்னையிலிருந்து ஏற்றுமதி
ADDED : ஆக 09, 2025 01:17 AM

சென்னை:கடந்த மார்ச் மாதத்தில், மொரீஷியஸ் நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு, 'ஸ்விட்ச் மொபிலிட்டி' நிறுவனத்தின் 100 'இ.ஐ.வி., 12' என்ற மின்சார பஸ்களை பரிசாக வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், 10 பஸ்கள் கொண்ட முதல் தொகுப்பை, அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்தது, ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம்.
இந்த பஸ்களை, அந்நாட்டின் பிரதமரான நவீன்சந்திர ராம்கூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவை, ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டன.
இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஸ்விட்ச் மொபிலிட்டி.
இந்த பஸ்சில், 45 பேர் வரை பயணிக்க முடியும். இதில், 180 முதல் 400 கி.வாட்.ஹார்., வரையிலான வெவ்வேறு ஆற்றல் கொண்ட பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 300 கி.மீ., வரை பயணிக்கலாம்.