மின்சார கார்கள் விற்பனை; அக்டோபரில் 57% அதிகரிப்பு
மின்சார கார்கள் விற்பனை; அக்டோபரில் 57% அதிகரிப்பு
UPDATED : நவ 10, 2025 10:29 AM
ADDED : நவ 10, 2025 12:49 AM

புதுடில்லி: புதிய கார்கள் அறிமுகம், சார்ஜிங் வசதி மேம்பாடு ஆகியவை காரணமாக, கடந்த அக்டோபரில் மின்சார கார்கள் விற்பனை 57.50 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
முந்தைய ஆண்டு அக்டோபரில் 11,464 கார்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 18,055 கார்கள் விற்பனையாகி உள்ளதாக, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா விற்பனை சரிவு
இந்தியாவில் கடந்த அக்டோபரில் 40 கார்களை டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எனினும், முந்தைய மாதத்தோடு ஒப்பிடுகையில், அந்நிறு வ ன கார் விற்பனை 37.50 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மாடல் ஒய்.எஸ்.யூ.வி., கார்களை மட்டுமே விற்பனை செய்து வரும் டெஸ்லா, கடந்த செப்டம்பரில் 64 கார்களை விற்பனை செய்திருந்தது. அக்டோபரில் 40 கார்கள் சேர்த்து, இதுவரை மொத்தம் 104 கார்களை விற்பனை செய்துள்ளது.

