sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

சீன 'காந்தப்புயலில்' சிக்கிய மின்சார வாகன துறை

/

சீன 'காந்தப்புயலில்' சிக்கிய மின்சார வாகன துறை

சீன 'காந்தப்புயலில்' சிக்கிய மின்சார வாகன துறை

சீன 'காந்தப்புயலில்' சிக்கிய மின்சார வாகன துறை


ADDED : ஜூன் 02, 2025 12:58 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:அண்மையில் அரிய வகை தாது பொருட்கள் மற்றும் காந்தம் ஏற்றுமதிக்கு சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ராணுவத்துக்கு அல்லாத பயன்பாட்டுக்கு மட்டும் இறக்குமதி செய்வதாக, அந்தந்த நாட்டின் அரசிடம் இருந்து சான்றிதழ் பெற்று தருவோருக்கு மட்டுமே, அரிய வகை தாதுப் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி தரப்படும். அதிலும், சீன அரசின் கட்டுப்பாட்டின்கீழ் குறைந்த அளவிலான ஏற்றுமதியே அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மின்சார வாகன தயாரிப்பு உள்ளிட்ட பலவற்றுக்கு தேவைப்படும் காந்தத்தை ஏற்றுமதி செய்வதிலும் சீனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சீன அரசின் கட்டுப்பாடுகளால், அந்நாட்டிலிருந்து காந்த ஏற்றுமதி 51 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இதனால், உலகளவில் மின்சார வாகன தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் மின்சார வாகன உற்பத்தி ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் இந்த முடிவால், கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக, அமெரிக்க அரசுக்கு ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா, போக்ஸ்வேகன், ஹூண்டாய் நிறுவனங்கள் அவசர கடிதம் எழுதியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் உள்ள இறக்குமதி காந்தத்தின் இருப்பு, மே மாதத்துடன் தீர்ந்து விடும் என, வாகன நிறுவனங்கள் சங்கமான சியாம் எச்சரித்துள்ளது.

சீனாவுடன் பேச்சு நடத்தி, காந்த இறக்குமதியை சீர்செய்யுமாறு, அரசிடம் மாருதி சுசூகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.

சீன காந்த இறக்குமதி பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட வேண்டுமென, மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான சியாம் வலியுறுத்தியுள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மற்ற நாடுகளில் இருந்து அதிக இறக்குமதி ஆகியவற்றை அரசு பரிசீலித்து வருகிறது.

அரசு - தனியார் கூட்டு வாயிலாக காந்த உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

அரிய வகை தாதுப் பொருட்கள் உற்பத்தி



இந்தியாவின் காந்த இறக்குமதி


2024--25: 460 டன்
2025-26: 700 டன் (இலக்கு)
சீனாவிலிருந்து இறக்குமதி2013: 73.50%
2024: 82.90%சீனாவிடமிருந்து சான்றிதழ் பெற்றுள்ளஇந்திய இறக்குமதியாளர்கள் எண்ணிக்கை: 30



வாகனங்களில் காந்தத்தின் பயன்பாடு


 வைப்பர் மோட்டார்
 ஆன்டி லாக் பிரேக் சென்சார்
 ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்
 திராட்டில்
 சீட் பெல்ட்
 ஸ்பீக்கர்
 லைட்ஸ்
 பவர் ஸ்டியரிங் மோட்டார்கள்



காந்த உற்பத்தி


சீனா: 2.70 லட்சம் டன்
அமெரிக்கா: 45,000 டன்
இந்தியா: 2,900 டன்



குறுகிய காலத்தில் சாத்தியமில்லை



ஆவணங்களை தாக்கல் செய்து, காந்த இறக்குமதிக்கு ஒப்புதல் பெற 40 முதல் 45 நாட்கள் ஆகும். இதனால், உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தி கடுமையாக பாதிக்கும். காந்தங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய, முதலீடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சோதனை உள்ளிட்ட கட்டமைப்புகள் தேவை. இதற்கு பல ஆண்டுகள் ஆகும். குறுகிய காலத்தில் சாத்தியம் இல்லை.

@

- ராகேஷ் சர்மா

செயல் இயக்குநர், பஜாஜ் ஆட்டோ






      Dinamalar
      Follow us