ADDED : செப் 10, 2025 11:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சார வாகன சந்தையில் மிக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
வாகன டீலர்கள் சங்க கூட்டமைப்பின் நிகழ்ச்சிக்கு அவர் விடுத்த வீடியோ செய்தி:
கடந்த நிதியாண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நம்நாட்டின் வாகனத் துறை மிக விரைவான மாற்றத்தையும், துாய எரிசக்தி போக்குவரத்தை நோக்கி முன்னேற்றத்தையும் கண்டு வருகிறது.
மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை 21 சதவீதமும், மூன்று சக்கர வாகன விற்பனை 57 சதவீதமும் வளர்ச்சி கண்டு வருகின்றன. மின்வாகனத் துறையில் விரைவான வளர்ச்சி காணும் நாடுகளில், இந்தியா இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.