மின் வாகனத்துறை 2030க்குள் ரூ.3.32 லட்சம் கோடியை எட்டும்
மின் வாகனத்துறை 2030க்குள் ரூ.3.32 லட்சம் கோடியை எட்டும்
ADDED : பிப் 13, 2024 05:02 AM
எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள், நாட்டின் மின் வாகனங்களுக்கான உற்பத்தியில், 30 சதவீதத்தை தமிழகம் கைப்பற்றும் என்றும், கிட்டத்தட்ட 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை இது அடையும் என்றும் எதிர்பார்ப்பதாக, தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மின் வாகன தொழில் துறையானது, தற்போது மின் வாகன பாகங்கள், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் உற்பத்தியை உள்ளடக்கிய ஒரு விரிவான உற்பத்தி சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தின் தொழில் துறையானது, குறிப்பாக மின் வாகனத் துறையின் சில பிரிவுகளுக்கு பெரும் முதலீட்டு வாய்ப்பைக் கொண்டுள்ளது.
மேலும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், குறிப்பாக இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்களின் பிரிவுகளில், இதற்கேற்ற சூழலமைப்பை உருவாக்குவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து வருகிற 2030ம் ஆண்டுக்குள் தமிழக மின் வாகனத் துறை, 3.32 லட்சம் கோடி ரூபாயை அடையும் என எதிர்பார்ப்பதாக, தொழில் துறையினர் தெரிவித்தனர்.