ADDED : அக் 06, 2025 11:58 PM

ஹைதராபாத் :அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் 8,800 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான எலி லில்லி தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட எலி லில்லி நிறுவனம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்டவற்றுக்கான புதிய மருந்துகள் தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் மேற் கொள்ளப்படும் மருந்து தயாரிப்பை மேற்பார்வை யிடவும், மேம்பட்ட தொழில்நுட்ப திறன்கள் அளிக்கும் வகையிலும், புதிய மையத்தை ஹைதராபாதில் துவங்க உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.