உள்ளடக்கத்திற்கு செல்ல

மஹிந்திரா குழும நிறுவனத்தை கைப்பற்றுகிறது எம்பிரயர்
மஹிந்திரா குழும நிறுவனத்தை கைப்பற்றுகிறது எம்பிரயர்
UPDATED : அக் 11, 2026 12:00 AM
ADDED : அக் 10, 2026 10:46 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: விமானம், ராணுவம் சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும், மஹிந்திரா குழுமத்தை சேர்ந்த நோவாவையு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை, பிரேசில் நாட்டின் எம்பிரயர் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது.
எம்பிரயர் நிறுவனம், அதன் பெரும்பாலான பங்குகளை கைபற்றுவதால், அந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக மாறுகிறது. ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை எம்பிரயர் நிறுவனமும், மீதம் உள்ள 49 சதவீத பங்குகளை மஹிந்திரா டிபன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனமும் வைத்திருக்கும்.
எம்பிரயர் நிறுவனம், சரக்கு, பயணியர் மற்றும் ராணுவ விமானங்களை உற்பத்தி செய்து வருகிறது.
