UPDATED : அக் 11, 2026 12:00 AM
ADDED : அக் 10, 2026 10:46 PM

57.45
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் 1.01 லட்சம் கோடி ரூபாய் குறைந்து 57.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ரிசர்வ் வங்கி தகவல்
20
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் 20 சதவீதம் வரை வளர்ச்சியை காணும் என கோட்டக் இன்ஸ்ட்டியூஷனல் ஈக்வட்டிஸ் அறிக்கை
30
அமெரிக்காவின் வேலைவாய்ப்பு கட்டுப்பாட்டால் இந்திய ஐ.டி., நிறுவனங்களின் லாப வரம்பு அடுத்த 12 மாதங்களில் 10 – 30 அடிப்படை புள்ளிகள் வரை பாதிப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் கணிப்பு
6
நாட்டின் 6ஜி தொலைதொடர்பு சேவை அறிமுகம் 2030க்கு தள்ளிப்போகும் என செல்லுலார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சங்கம் தகவல்
100
தற்போதைய பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 75 – 100 அடிப்படை புள்ளிகள் உயர்த்தலாம் என எஸ்.பி.ஐ., கேப்பிடல் மார்க்கெட்ஸ் கணிப்பு.
