ADDED : ஏப் 04, 2025 11:03 PM

சென்னை:பொதுத்துறை நிறுவனங்கள், 'ஜெம் போர்ட்டல்' வாயிலாக, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்வதை உறுதி செய்ய, கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்துமாறு, மத்திய அரசுக்கு, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' பொது செயலர் வாசுதேவன் கூறியதாவது:
மத்திய, மாநில அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை தங்களின் ஆண்டு கொள்முதலில், 25 சதவீதம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து கட்டாயம் வாங்க வேண்டும் என்று, மத்திய அரசின் உத்தரவு உள்ளது.
அரசு நிறுவனங்கள், 'ஜெம் போர்ட்டல்' வாயிலாக, பொருட்களை கொள்முதல் செய்வதுடன், சேவைகளையும் பெறுகின்றன. இந்த போர்ட்டலில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டும் அல்லாது, பெரிய நிறுவனங்களும் பொருட்களை விற்கின்றன.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து, 25 சதவீத பொருட்களை கட்டாயம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதி, ஜெம் போர்ட்டலில் அமல்படுத்தப்படவில்லை.
எனவே, பெரும்பாலான நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்காத நிலை உள்ளது.
எனவே, ஜெம் போர்ட்டலில் சிறு, குறு, நடுத்தர தொழில்களிடம் இருந்து, 25 சதவீதம் கட்டாயம் வாங்குவதை உறுதி செய்ய, கண்காணிப்பு வசதியை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெண்டரில் பங்கேற்பதற்கு எளிமையான வழிமுறைகள்
கட்டாய கொள்முதல் அளவை 40% உயர்த்த வேண்டும்
குறுந்தொழில்களுக்கு 25% என உள் ஒதுக்கீடு தேவை