ADDED : ஏப் 24, 2025 11:44 PM

புதுடில்லி:நிறுவனத்துக்காக பெற்ற கடனில் பெரும்பகுதியை, சொந்த சுகபோகத்துக்காக செலவிட்டதாக செபி நடவடிக்கைக்கு ஆளான ஜென்சால் இன்ஜினியரிங் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதன் உரிமையாளர் களில் ஒருவரான புனீத் ஜக்கியை அதிகாரிகள் கைது செய்தனர்.
டில்லி, குருகிராம், ஆமதாபாத் நகரங்களின் ஜென்சால் அலுவலகங்களில் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டமான பெமா-வின் கீழ் ஈ.டி., அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
டில்லி ஹோட்டலில் தங்கியிருந்த புனீத் ஜக்கி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது சகோதரர் அன்மோல் ஜக்கி, துபாயில் இருப்பதால், அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
கடனாக பெற்ற தொகையில் மனைவி, தாய்க்கு பல கோடி ரூபாயை வழங்கியதுடன் 45 கோடி ரூபாய்க்கு ப்ளாட் வாங்கியது செபி விசாரணையில் தெரிய வந்தது.

