UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 11:17 PM

புதுடில்லி: கடன் மோசடி வாயிலாக, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்துக்கு 1,322 ரூபாய் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் ‘ஜீ’ ஊடக குழும நிறுவனர் சுபாஷ் சந்திரா மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து, வசந்த் சாகர் ப்ராபர்டீஸ் மற்றும் டிஜிட்டல் சப்ஸ்க்ரைபர் மேனேஜ்மென்ட் நிறுவனங்களுக்கு மொத்தம் 980 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதற்கு உத்தரவாதமாக, சுபாஷ் சந்திரா போலியான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சொத்து மதிப்பு சான்றிதழ்களை அளித்துள்ளார்; இதனால் தங்களுக்கு 1,322 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் புகார் தெரிவித்தது.
இதன் அடிப்படையில், சி.பி.ஐ., ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது அமலாக்க துறையும் சுபாஷ் சந்திரா மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளது.
