ADDED : மே 29, 2025 11:24 PM

புதுடில்லி:எண்ணெய் வித்துக்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய, பிரதமரின் ஆஷா திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள பி.டி.பி.எஸ்., எனும், விலை வித்தியாசத்தை ஈடு செய்யும் திட்டத்தை செயல்படுத்த, இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்திஉள்ளது.
விவசாயிகளுக்கும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் இத்திட்டம் உதவியாக இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளது. சங்கத் தலைவர் சுதாகர் தேசாய் கூறுகையில், “பி.டி.பி.எஸ்., திட்டத்தை செயல்படுத்துவது விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதோடு, உள்நாட்டு பதப்படுத்தல் திறனை மேம்படுத்தி, சமையல் எண்ணெய் கிடைக்கும் தன்மையையும், கால்நடை துறைக்கு எண்ணெய் புண்ணாக்கு வினியோகத்தையும் அதிகரிக்கும்,” என்றார்.
பி.டி.பி.எஸ்., திட்டத்தின் கீழ், சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருந்தால், 15 சதவீதம் வரையிலான விலை வித்தியாசம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.