ADDED : ஜன 03, 2025 01:21 AM

சென்னை:சென்னை வர்த்தக மையத்தில், ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில், சிறு, குறு மற்றும் இளம் தொழில் முனைவோருக்கான 13வது வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. இதை, 'தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை'க்கு கீழ் செயல்படும் 'இளம் தொழில் முனைவோர் பள்ளி' நடத்துகிறது.
சென்னையில் முதல் முறை நடக்கும் இக்கண்காட்சியை, தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைக்கிறார். 'உங்கள் நோக்கத்தை தேடுங்கள்' என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த மாநாடு மற்றும் கண்காட்சியில், 2,500க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர் பள்ளி உறுப்பினர்கள், 30 துறைகளை சார்ந்த 270க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்கள் ஸ்டால்களை அமைக்கின்றன.
மேலும் இதில், பொதுமக்கள் கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4ம் தேதி நடைபெறும் மாநாட்டில், வணிக உத்திகள், தலைமைத்துவ திறன்கள் உள்ளிட்டவற்றை கற்பிக்க முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.

