அதிக மின் கட்டணத்தால் தொழில் பாதிப்பு மத்திய அமைச்சர் முருகனிடம் தொழில் முனைவோர் புகார்
அதிக மின் கட்டணத்தால் தொழில் பாதிப்பு மத்திய அமைச்சர் முருகனிடம் தொழில் முனைவோர் புகார்
ADDED : அக் 12, 2025 11:13 PM

அன்னுார்:'மின் கட்டண உயர்வு மற்றும் சீன பொருட்கள் இறக்குமதியால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது,'என, மத்திய அமைச்சர் முருகனிடம், தொழில் முனைவோர் புகார் தெரிவித்தனர்.
ஜி.எஸ்.டி., குறைப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தொழில் முனைவோரிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்டம், அன்னுார் அருகே பிள்ளையப்பம் பாளையத்தில் ந டந்தது.
இந்நிகழ்ச்சின் போது, தொழில் முனைவோர், மத்திய அமைச்சரிடம் கூறியதாவது:
சீனாவில் இருந்து பல 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோபால்ட் பொருட்கள் இங்கு இறக்குமதி ஆகின்றன.
கோபால்ட் தாதுவால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மீண்டும் இறக்குமதி வரி விதிக்க வேண்டும். இதனால் உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் அதிகம் விற்பனையாகும். அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும்.
இந்திய பருத்தி கழகம் நூற்பாலைகளுக்கு மட்டும் பஞ்சு விற்க வேண்டும். வியாபாரிகளுக்கு விற்பதால் அவர்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கின்றனர். பஞ்சு, காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என விற்பனையாகிறது.
பஞ்சு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே விலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம், நிலை கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதை தொழில் செய்வோரால் தாங்க முடியவில்லை. இதனால், தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சோலார் அமைக்க 100 சதவீதம் வங்கி கடன் தர வேண்டும். கடனுக்கு இரண்டு சதவீதம் வட்டி மானியம் வழங்க வே ண்டும்.
கோழிப் பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம் கட்டுபடியாகும் விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர் பதிலளிக்கையில், ''இந்த கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.