UPDATED : அக் 13, 2026 02:47 PM
ADDED : அக் 13, 2026 02:44 PM

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும் 15 முதல் 17ம் தேதி வரை, ‘பேக்விஷன் எக்ஸ்போ – 2026’ பேக்கேஜிங் தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது. பேக்கேஜிங் இயந்திரங்கள் முதல் லேபிள் அச்சிடுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் பொருட்கள் வரை பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
என்ன பார்க்கலாம்?
- பேக்கேஜிங் இயந்திரங்கள்
- அட்டைப்பெட்டி தயாரிப்பு இயந்திரங்கள்
- லேபிள் அச்சிடும் தொழில்நுட்பங்கள்
யாருக்கு பயன்படும்?
- உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள்
- மருந்து மற்றும் அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்கள்
- பேக்கேஜிங், அச்சிடுதல் மற்றும் லேபிள் நிறுவனங்கள்
நிறுவனங்களுக்கு என்ன பயன்?
- புதிய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நேரில் அறியலாம்
- உற்பத்திக்கு ஏற்ற பேக்கேஜிங் முறைகளை ஒப்பிடலாம்
- இயந்திர தயாரிப்பாளர்கள், சப்ளையர்களை நேரடியாக சந்திக்கலாம்
