கண்காட்சி கார்னர். ‘டெக்டெக்ஸ்டில் இந்தியா சம்மிட் 2026’
கண்காட்சி கார்னர். ‘டெக்டெக்ஸ்டில் இந்தியா சம்மிட் 2026’
UPDATED : அக் 23, 2026 07:11 PM
ADDED : அக் 23, 2026 07:06 PM
டெக்ஸ்டைல்ஸ் துறையின் புதிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் ‘டெக்டெக்ஸ்டில் இந்தியா சம்மிட் 2026’, கோவையில் நவ., 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் ஜவுளிதுறை மற்றும் கைடன்ஸ் தமிழ்நாடு இணைப்புடன், மெஸ்ஸே பிராங்பர்ட் டிரேட் பேர்ஸ் இந்தியா இதை நடத்துகிறது.
என்ன பார்க்கலாம்?
*டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்
*நெய்யப்படாத சிறப்பு துணிகள்
*மருத்துவம் மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டு துணிகள்
*புதிய உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் மூலப்பொருட்கள்
யாருக்கு பயன்படும்?
*ஜவுளி மற்றும் துணி உற்பத்தியாளர்கள்
*சிறு, குறு தொழில் நிறுவனங்கள்
*இயந்திரம் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர்கள்
*தொழில்நுட்ப துணி தயாரிப்பாளர்கள்
*புதிய தொழில் வாய்ப்புகளை தேடும் தொழில்முனைவோர்
என்ன பயன்?
*பெரிய நிறுவனங்களின் புதிய தேவைகளை அறியலாம்
*டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் துறையில் புதிய தயாரிப்பு வாய்ப்புகளை கண்டறியலாம்
*தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வாங்குபவர்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தலாம்
*புதிய சந்தைகள், கூட்டுத் தொழில் மற்றும் தொழில்நுட்ப இணைப்புகளுக்கான வாய்ப்புகளை பெறலாம்
கண்காட்சி விபரம்
நாள்: நவ.26 முதல் 27 வரை
இடம்: கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம், கோவை
பதிவு: தொழில்துறையினருக்க்கு மட்டும் அனுமதி, முன்பதிவு கட்டாயம் மற்றும் இலவசம்
இணையதளம்: techtextil-india-summit.in.messefrankfurt.com
