ஸ்டீல் இறக்குமதி பிரச்னைகள் அக்., 28ல் அமைச்சகம் பேச்சு
ஸ்டீல் இறக்குமதி பிரச்னைகள் அக்., 28ல் அமைச்சகம் பேச்சு
UPDATED : அக் 23, 2026 07:11 PM
ADDED : அக் 23, 2026 07:06 PM
புதுடில்லி: ஸ்டீல் இறக்குமதி தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, மத்திய ஸ்டீல் அமைச்சகம் வரும் அக்., 28ம் தேதி வெளிப்படையான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்டீல் இறக்குமதி கண்காணிப்பு அமைப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணை விலக்கு தொடர்பான பிரச்னைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
ஸ்டீல் இறக்குமதி தொடர்பான நடைமுறைகளில் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர், தங்களுக்கான நேர ஒதுக்கீட்டை பெற கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கலந்துரையாடல் விவரங்கள்
நாள்: அக்டோபர் 28, 2026
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: ஸ்டீல் அறை, 3-வது மாடி, நேதாஜி நகர், புதுடெல்லி
மின்னஞ்சல்: tech-steel@nic.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 26, 2026, நண்பகல் 12 மணிக்குள்
