ADDED : நவ 28, 2024 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, வீடுகளுக்கு 'லிப்ட்' தயாரிக்கும் 'நிபவ்' நிறுவனம், தன் ஆலையை சென்னையில் விரிவாக்கம் செய்துள்ளது.
இதன் வாயிலாக, தற்போது ஆண்டுக்கு 7,500 ஆக உள்ள லிப்ட் தயாரிப்பு, இருமடங்காக அதிகரித்து 15,000 ஆக உள்ளது. இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி பரப்பில் செயல்படும் இந்த ஆலையின் விரிவாக்கத்தால், கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிபவ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனருமான விமல் பாபு தெரிவித்தார்.