
'அகர்வுட் சிப்ஸ்' ஏற்றுமதி ஆண்டு வரம்பு அதிகரிப்பு
அகர்வுட் சிப்ஸ் மற்றும் அதன் பொடிகளின்
மாநிலங்களுக்கான ஏற்றுமதி வரம்பு, 25,000 கிலோவில் இருந்து 1.51 லட்சம் கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது
மாநிலவாரியான அகர் எண்ணெய் ஏற்றுமதிக்கான ஆண்டு வரம்பும் 1,500 கிலோவில் இருந்து 7,050 கிலோவாக
உயர்த்தப்பட்டுஉள்ளது
அகர்வுட் சிப்ஸ், அக்விலேரியா மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் துண்டுகளாகும்.
அசாம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்கள் அதிகம் ஏற்றுமதி செய்கின்றன
துவரம் பருப்பு இறக்குமதி ஓராண்டுக்கு நீட்டிப்பு
துவரம் பருப்பின் வரியில்லா இறக்குமதியை அடுத்தாண்டு மார்ச் வரை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது
சில்லரை உணவு பணவீக்கத்தை தடுக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது
தற்போதைய இந்த இறக்குமதி கொள்கை, கடந்த 2021 மே மாதம் அறிமுகப்படுத்தப்
பட்டது. வானிலை மற்றும் உள்நாட்டு
உற்பத்தியில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களினால், இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, வரியில்லா இறக்குமதிக்கு அரசு
அனுமதித்திருந்தது.
கடந்த 20ம் தேதி நிலவரப்படி துவரம் பருப்பின் சராசரி சில்லரை விலை கிலோ ஒன்றுக்கு 152 ரூபாய்.