ADDED : அக் 04, 2025 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:'ரோட்டெப்' எனும் ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி மற்றும் சுங்கத்தீர்வை தள்ளுபடி திட்டத்தை 2026 மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப் பான 'பியோ' வரவேற்பு தெரிவித்து உள்ளது.
'பியோ' தலைவர் ரால்ஹான் அறிக்கை:
இந்த சலுகை நீட்டிப்பு வாயிலாக ஏற்றுமதி ஊக்குவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை, 2026 மார்ச் 31 வரை நீட்டித்து, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இது, ஏற்றுமதியாளர்கள் உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு உள்ள நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. ஏற்றுமதிகளை நம்பிக்கையுடன் திட்டமிட இது உதவும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.