sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிவேக ரயிலில் சென்னை - பெங்களூரு பயண நேரம் 73 நிமிடம் மட்டுமே

/

அதிவேக ரயிலில் சென்னை - பெங்களூரு பயண நேரம் 73 நிமிடம் மட்டுமே

அதிவேக ரயிலில் சென்னை - பெங்களூரு பயண நேரம் 73 நிமிடம் மட்டுமே

அதிவேக ரயிலில் சென்னை - பெங்களூரு பயண நேரம் 73 நிமிடம் மட்டுமே

25


UPDATED : பிப் 01, 2026 09:54 PM

ADDED : பிப் 01, 2026 09:30 PM

Google News

25

UPDATED : பிப் 01, 2026 09:54 PM ADDED : பிப் 01, 2026 09:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வெறும் ஒரு மணி நேரம் 13 நிமிடத்தில் ( மொத்தம் 73 நிமிடம்) மொத்தம்செல்ல முடியும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று பார்லியில் தாக்கல் செய்தார். அதில், தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களை இணைக்கும் 'தெற்கு அதிவேக வைரம்' என்ற முக்கிய ரயில் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய தென்னிந்திய நகரங்களை இணைத்து 'தெற்கு அதிவேக முக்கோணம்' அல்லது 'தெற்கு அதிவேக வைரம்' போன்ற அமைப்பு உருவாக்கப்படும். இது தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கும் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

இந்தத் திட்டத்தின் மூலம் நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூருவுக்கான ரயில் பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 13 நிமிடங்களாகக் குறையும். அதேபோல, வெறும் 2 மணிநேரத்தில் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்று விடலாம். சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கான பயண நேரம் 2 மணிநேரம் 55 நிமிடங்களாக இருக்கும்.

சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் ஐடி நிறுவனங்களின் மையமாக திகழ்கின்றன. இந்த அதிவேக வைர அமைப்பை உருவாக்குவது தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 4,000 கிலோ மீட்டர் நீள வழித்தடங்கள் மூலம் ரூ. 16 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும். இது நாட்டிற்கு மட்டுமல்லாது, தென்னிந்திய மாநில மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us