UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 10:06 PM

புதுடில்லி: பெட்ரோல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை ரத்து செய்துள்ள மத்திய அரசு, டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் இந்த புதிய வரி மாற்றம் நேற்று (அக்., 31) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, பெட்ரோல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு 2.50 ரூபாயாக இருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம், டீசல் ஏற்றுமதி வரி லிட்டருக்கு 8.50 ரூபாயில் இருந்து 11.50 ரூபாயாகவும், விமான எரிபொருள் மீதான வரி 10.50 ரூபாயில் இருந்து 11 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்காசிய போர் பதற்றத்தால் சர்வதேச சந்தை யில் எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டபோது, உள்நாட்டில் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த மார்ச் 27ம் தேதி முதல் இந்த ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த வரி விகிதங்களை மத்திய அரசு மாற்றியமைத்து வரு கிறது.
