ADDED : அக் 21, 2024 12:49 AM

மும்பை:கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மென்பொருள் சேவைகளின் ஏற்றுமதி 17.03 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கணினி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் ஏற்றுமதி குறித்த ரிசர்வ் வங்கியின் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வெளிநாட்டு கிளை நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் உட்பட, மொத்த மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 17.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, முந்தைய நிதியாண்டில் 16.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
வெளிநாட்டு கிளை நிறுவனங்களின் விற்பனையை தவிர்த்து, இந்திய நிறுவனங்களின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 2.80 சதவீதம் அதிகரித்து 15.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
தரவுகளின்படி, அமெரிக்கா 54 சதவீதத்துடன் ஏற்றுமதிக்கான முக்கிய நாடாக உள்ளது. இதைத் தொடர்ந்து, ஐரோப்பா 31 சதவீதத்துடன் உள்ளது. ஏற்றுமதிக்கான முக்கிய இலக்கு நாடாக பிரிட்டன் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.